NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மண்மேடு சரிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் பலி!

கேகாலை – மங்களகம, குருந்திய வராஹேன கிராமத்தில் மண் மேடு சரிந்து 3 1/2 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் வீட்டின் பின்புறம் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட குறித்த பள்ளத்தில் சிறுவன் இருந்தபோது, அதற்கு மேல் இருந்த மண்மேடு சிறுவன் மீது சரிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர், அங்கிருந்தவர்கள் சிறுவனின் மீது விழுந்த மண்ணை அகற்றி உடனடியாக கேகாலை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles