NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையில் மோதல் – 41 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையொன்றில் நடந்த மோதல்களினால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெகுசிகால்பாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிறைச்சாலையில் நேற்று (20) இச்சம்பவம் இடம்பெற்றது என அந்நாட்டு பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், இறந்தவர்கள் அனைவரும் கைதிகளா என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பான தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles