NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர்!

தீபாவளி பண்டிகை வருகின்ற 12 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (08) இரவு தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இந்த விழாவில், இங்கிலாந்தில் வசிக்கும் இந்து சமூதாயத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். 

இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் சமூகவலைத்தளத்தில், புகைப்படங்களை பகிர்ந்து, உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles