NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியை கொலை செய்து விபத்தெனக்கூறி வைத்தியசாலையில் அனுமதித்த கணவன்!

மனைவியின் தலையில் ஆயுதத்தால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டு, வாகன விபத்து ஏற்பட்டதாகக் கூறி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அவரது கணவரை சந்தேகத்தின் பேரில் களுத்துறை குற்ற விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

பதுரலிய, மரகஹதெனிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இரவு, துலீகா என்ற 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவி எம்.பி.கசுனியை, முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாக பதுரலிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட பின்னர் அவர் சிகிச்சைப் பலனின்றி மே 7 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் களுத்துறை குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளின் நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக சுற்றிவளைப்பில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share:

Related Articles