NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியினரும், இரட்டைக்குழந்தைகளும்..

அமெரிக்கா – கலியோர்னியா மாகாணத்தில் உள்ள சான் மேடியோ என்ற இடத்தில் வசித்து வந்த இந்தியா – கேரளாவை சேர்ந்த தம்பதியினரும் அவர்களது இரட்டைப்பிள்ளைகளும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த 12ஆம் திகதி, குறித்த தம்பதியை உறவினர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, மறுமுனையில் பதில் எதுவும் வராததால், சந்தேகம் அடைந்த அந்த உறவினர், அவர்களது நண்பர்களை தொடர்பு கொண்டு விவரத்தை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற நண்பர்கள் சிலர், வீட்டுக்கதவை தட்டியும், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை என்பதால், இதனால் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டின் குளியல் அறையில் தம்பதி இருவரும், படுக்கை அறையில் இரட்டை குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர். உடனடியாக நண்பர்கள் அது குறித்து சான் மேடியோ பகுதி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார், 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவில் சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 7 பேர் இயற்கைக்கு மாறான வகையில் மரணம் அடைந்துள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles