பதுளை மற்றும் ஹாலிஎல புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (29) புகையிரதம் தடம் புரண்டதால், மலையக புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொடிமனிக்கே புகையிரதத்தின் இயந்திரப் பகுதியும் பின் பெட்டியும் இவ்வாறு தடம்புரண்டள்ளன.
மேலும் அப்பகுதியில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் புகையிரத பாதையில் சேறும் சகதியுமாக காணப்படுவதால் போக்குவரத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவிக்கின்றது.