NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாத்தறையில் ஆயுதக்களஞ்சியம் கண்டுபிடிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மாத்தறை மாவட்டத்தின் திஹாகொட – பண்டரத்தவெல்ல பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரி – 56 துப்பாக்கி, ஒரு மகசீன், 10 ரி – 56 தோட்டாக்கள் மற்றும் ஏனைய ரக துப்பாக்கிகளின் 10 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், இதுதொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மாத்தறை குற்றப்பிரிவு மற்றும் மாத்தறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Related Articles