(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வரலாற்றுச் சிறப்புமிக்க எசல ரந்தோலி பெரஹெரவை முன்னிட்டு தெனியாய -அக்குரஸ்ஸ பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் விடுத்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ரந்தோலி பெரஹெர, நாளை (01) பிற்பகல் 01.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வீதி உலா நடைபெறுவதால் அவ்வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.