NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சார வேலியில் சிக்கி தாய் உயிரிழப்பு – மகனும், மகளும் பாதிப்பு

குருநாகல்இ நாகொல்லாகம திம்பிரிவெவ பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் சட்டவிரோதமாக காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகள் மற்றும் மகனுக்கு மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தலமல்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் வளர்த்த பூனையை காணவில்லை என்றும் தாய், மகள், மகன் ஆகியோர் பூனையை தேடிச் சென்றபோது மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகல்லாகம பகுதியில் வசித்து வந்த 58 வயதுடைய ஆர்.எம்.பிசோ மெனிகே என்ற பெண்ணே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோத மின்சாரத்தை பயன்படுத்தியதாக கூறப்படும் 56 வயதுடைய விவசாயி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles