NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின் கசிவு காரணமாகவே அக்குரணை உணவகத்தில் தீ விபத்து..!

அக்குரணை உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கட்டிடத்தின் பேக்கரியில் உள்ள மின்சார அடுப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் உணவகத்திற்கு அருகாமையில் உள்ள விற்பனை நிலையம் மற்றும் சர்வதேச பாடசாலை உட்பட பல கடைகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரணை நகரில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் நேற்று (05) காலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக கண்டி – மாத்தளை (ஏ9) வீதியும் நேற்று காலை தற்காலிகமாக மூடப்பட்டது.கடும் முயற்சிக்கு பின் காலை 10 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles