NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மியாமி ஓபன் டென்னிஸ் – டிமிட்ரோவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட டிமிட்ரோவ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை(30) நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் டேனியல் மெத்வதேவ் – ஜன்னிக் சின்னெர், கிரிகோர் டிமிட்ரோவ் – அலெஸ்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதவுள்ளனர்.

Share:

Related Articles