NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீளப்பெறப்பட்ட இலங்கையின் வெள்ளிப்பதக்கம் !

சீனாவில் இடம்பெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400×4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை வென்ற வெள்ளிப் பதக்கம், முறையற்றது என ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொழில்நுட்பக் குழு தீர்மானித்து குறித்த வெள்ளிப்பதக்கம் மீளப்பெறப்பட்டது.

அந்த போட்டியில் இலங்கை அணி சட்டவிரோத ஓட்டத்தை பயன்படுத்தியதாக தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இலங்கையிடமிருந்து வெள்ளிப்பதக்கம் மீளப்பெறப்பட்டு, மூன்றாமிடம் பெற்ற இந்தியாவிடம் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்தியா வென்ற வெண்கலம், 4ஆம் இடம்பெற்ற கஜகஸ்தானுக்கு வழங்கப்பட்டது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles