NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதியோர் இல்லத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு.

குரோஷியா எனும் நாட்டின் தாருவார் நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றவர், உணவு விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என்றும் இராணுவ பொலிஸின் படை பிரிவில் ஒருவராக இருந்துள்ளார் என்றும் பதிவு செய்யாத சிறிய துப்பாக்கியையும் வைத்திருக்கிறார் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இச் சம்பவத்துக்கு அந் நாட்டின் பிரதமர் இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles