(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் சன் லூயிஸ் ரியோ கொரொடாவில் அமைந்துள்ள மதுபான விடுதிக்கு தீ வைத்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விடுதியில், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வெளியேற்றப்பட்ட நபர் ஒருவர், அந்த விடுதிக்கு தீ வைத்துள்ளார்.
இதில் 4 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.