NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை – நலிந்த ஜயதிஸ்ஸ

மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கல்வி விரிவான சீர்திருத்தத்திற்குள் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கல்வியின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் தொடர்பிலான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், முறையான கலந்துரையாடலின் பின்னர், ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

கல்வி தொடர்பான மாற்றங்களை அரசு மிகுந்த கவனத்துடன் எடுக்கும் என்றும், துறைசார்ந்தோரிடம் கலந்தாலோசித்து நிரந்தர முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles