NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மேலும் 24 மணித்தியாலத்திற்கு கனமழை தொடரும்..

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி, மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். 

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரத்னபுர, கிரியெல்லவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தும்பரை, அயகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்னபுரி, எலபாதவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேவாஹின்ன, அவிசாவளையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை, புவக்பிட்டியவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆண், அவரது மகள் மற்றும் பேரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தெய்யந்தர பல்லேவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles