(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின் படி, அடுத்த 24 மணிநேரத்திற்கு இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் செல்லும் பல நாள் மீன்பிடி படகுகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘மோகா’ எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தற்போது உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது படிப்படியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்வதால் இன்று நள்ளிரவில் பலத்த சூறாவளி உருவாக வாய்ப்புள்ளது.
அதன்பிறகு படிப்படியாக வலுப்பெற்று நாளை (12) காலை வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடாவை சுற்றி நாளை மாலை மிக வலுவான சூறாவளியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டவலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மே 14ஆம் திகதி காலை முதல் இந்த சூறாவளி சற்று வலுவிழந்து அன்று நண்பகலில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.