இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த சூறாவளிகளில் ஒன்றான யாகி சூறாவளி சீனாவின் பிரபல சுற்றுலாத்தீவான ஹெய்னனின் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த 4 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அந்த நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில்கள், படகுகள், விமானங்கள் என்பனவற்றின் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது தவிர தென் பிராந்தியத்தை அண்மித்த பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.