NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாசகருக்கு தீ வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

ஹோமாகம வைத்தியசாலை பகுதியில் நேற்றிரவு (29) உறங்கிக் கொண்டிருந்த யாசகர் ஒருவருக்கு தீ வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யாசகர் ஒருவரை பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாகவும், அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30) காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

64 வயதுடைய தர்மதாச என்ற நபரே உயிரிழந்துள்ள நிலையில், ஹோமாகம, கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:

Related Articles