NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (02) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். வளைவுக்கு அருகில் இளைஞன் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் வவுனியா பகுதியை சேர்ந்தவர் எனவும் கைதானவரிடமிருந்து 20 கிலோ 175 கிராம் கஞ்சா போதை பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Share:

Related Articles