NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் 10 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் . மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததுடன் ,அவரது உடைமையில் இருந்து 10 லீட்டர் கசிப்பினையும் மீட்டுள்ளனர். 

கைது செய்யபப்ட்ட நபரையும் , மீட்கப்பட்ட கசிப்பினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles