NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மைதானத்துடன் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தின் போது கிரிக்கெட் மைதானம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்ததாக இதனைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த உரையாடல் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான யோசனைக்கு வழிவகுத்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் பாரிய காணி கையாளப்படுவதை அறிந்ததாக தெரிவித்த அவர், காணி ஒதுக்கப்பட்ட போதிலும், கிரிக்கெட் மைதானமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த காணி சர்வதேச கிரிக்கட் மைதானமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், விளையாட்டுப் பயிற்சி வசதிகளும் அப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles