NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணம் – வல்லை தொண்டமானாறு பகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாணம் – வல்லை தொண்டமானாறு வீதிக்கு அருகாமையில் இன்று (22) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டிதுறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles