NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் கைது

வேறொரு நபருக்கு சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, செல்லுபடியாகும் விசாவின் மூலம் கனடாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை குடிவரவு அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.

அவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு நிலையத்திற்கு வந்து அங்கு பணிபுரியும் குடிவரவு அதிகாரியிடம் கடவுச்சீட்டை வழங்கினார்.

கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய மேலதிக தகவல்களைக் கண்டறியும் வகையில், குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேற திருகோணமலை நீதிமன்றம் தடை விதித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்த இளைஞனை குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு, இந்த இளைஞனின் சூட்கேஸில் அவரது உண்மையான தேசிய அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பிறகு அவர் குடிவரவு அதிகாரிகளிடம் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினார்.

கனடா சென்ற பின்னர் அனுராதபுர நகரத்தில் உள்ள தரகர் ஒருவர் தனக்கு ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாவை தரவேண்டுமென உறுதியளித்து கனடாவில் செல்லுபடியாகும் விசா உள்ள இந்த கடவுச்சீட்டை கொடுத்ததாக இந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles