(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட 42ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று(31) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி அன்று பேரினவாத கும்பலினால் யாழ்ப்பாண பொதுசன நூலகம் திட்டமிட்டு எரியூட்டப்பட்டது.
இதனால் தமிழர் வரலாற்றை எடுத்துக்கூறும் பழைமையான இலக்கியங்கள், ஓலைச்சுவடிகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அற்புதமான நூல்கள் திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப்போகின.
இந்நிலையில், வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்றையதினம் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.