NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு: பொதுமக்களிடம் உதவிகோரும் நிர்வாகம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமும் குருதிக்கான தேவை அதிகரித்துள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே 18 – 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 கிலோகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட நிறைகொண்ட ஆண் பெண் இருபாலாரும் இரத்த தானம் செய்ய முன்வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு முன்னர் இரத்ததானம் செய்து 4 மாதங்கள் நிறைவடைந்தவர்களும் புதிதாக இரத்ததானம் செய்ய விரும்புவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்ய முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

Share:

Related Articles