NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ் மாவட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல்..!

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயாகொந்தாவுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

உதவி அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில்

 பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா,   மற்றும் முப்படை தளபதிகள், அரசாங்க அதிகாரிகள் மாவட்டம் செயலக உத்தியோகத்தர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைப்புகள் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பொது வெல்ல அர்த்தங்கள் ஏற்படுகின்ற போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது, முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Share:

Related Articles