யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நடைபெற்று வரும் போரில் ரஷ்யாவுக்கு உதவும் நோக்கில் வட கொரியா 3,000 இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாகத் தென் கொரியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தென் கொரிய தேசிய புலனாய்வுத்துறை, அதன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.
அத்தோடு, மொத்தமாக சுமார் 10,000 துருப்புக்களை வழங்குவதாக வட கொரியா உறுதியளித்துள்ளது.
மேலும் அவர்கள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனுப்பப்பட்டு விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட கொரியா தனது இராணுவ வீரர்களைக் கப்பல் மூலம் அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட வட கொரியத் துருப்புகள், அங்கு பல்வேறு பயிற்சி நிலையங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.