(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தென் கொரியாவில் ரோபோவால் ஒருவர் உடல் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயதுடைய நபரே இந்த ரோபோவை சோதனை செய்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வசதியில், காய்கறி பெட்டிகளை பேக் செய்யும் போது உணவுப் பெட்டிகளில் இருந்து தொழிலாளியை வேறுபடுத்திப் பார்க்கத் தவறிய ரோபோ, அவரைப் பிடித்து, அவரது உடலை கன்வேயர் பெல்ட்டில் தள்ளி, அவரது முகத்தையும் மார்பையும் நசுக்கியதாக பிபிசி தெரிவித்துள்ளது.
விபத்தின் பின்னர் தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மார்ச் மாதம், வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்த 50 வயது தென் கொரிய நபர், ரோபோவால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்திருந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.