NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக அபராதம் விதிக்க இந்திய பொலிஸார் நடவடிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக அபராதம் விதிக்க இந்திய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புனே நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஷர்மா தனது லம்போர்கினி காரை புனே நெடுஞ்சாலையில் மணிக்கு 215 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஏனைய வீரர்களுடன் அவரும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அதிகாரப்பூர்வ பஸ்ஸில் பயணிக்குமாறு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர்.

Share:

Related Articles