NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரி அடையாள எண் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், வரி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு தொடங்கும் போதும், கட்டட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து வருவாய் உரிமம் புதுப்பிக்கும் போதும், நில உரிமையை பதிவு செய்யும் போதும் இந்த எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வரி அடையாள இலக்கம் பெற்றாலும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வருடாந்த வரி விலக்கு வரம்பான 12 இலட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles