NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரி செலுத்தாது இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் பறிமுதல்!

கடவத்தை பிரதேசத்தில் வரி செலுத்தாது இறக்குமதி செய்யப்பட்ட 500,000 ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கடவத்தை நகரில் இயங்கி வந்த இரவு விடுதியொன்றில் மதுவரி மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மதுவரி ஆணையாளர் நாயகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று இரவு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதையடுத்து குறித்த இரவு விடுதியை மூடி அரச முத்திரையிடுவதற்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share:

Related Articles