தற்போது நிலவும் வறண்ட வானிலை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
கொழும்பில் 28 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டிய வெப்பநிலை நேற்றை தினம் மாத்திரம் 31 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
இந்த அதிக வெப்பநிலை மக்களின் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, அதிக வெப்பநிலை காரணமாக இந்த நாட்களில் வெளியில் வேலை செய்பவர்கள், குறிப்பாக நெடுஞ்சாலைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் வயல்களில் வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான நீரிழப்பு இதயத்தையும் மூளையையும் பாதிக்கும் என்பதால், இந்த நிலைமைகளைத் தவிர்க்க, அதிக தண்ணீர் பருக வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.