NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் பரமி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வேறு மாகாணத்தில் உள்ள முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கான வருமான வரி பத்திரத்தை மத்திய மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த புதிய கணனி பயன்பாட்டின் மூலம் இலங்கையில் உள்ள முழு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களும் மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட உள்ளன.

தற்போது, வாகனம் பதிவு செய்யப்பட்ட மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகத்திலிருந்தும் வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல இலங்கையர்களும் தமது சேவைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொள்வதே மத்திய மாகாண போக்குவரத்து திணைக்களத்தின் நோக்கமாகும் என்றும் மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles