NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது, இந்து – அரேபிய எண்கள் அல்லது ஒரு புள்ளடியை மாத்திரம் பதிவு செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விருப்பு வாக்குகளைப் பதிவுசெய்யும்போது, 2 அல்லது 3 என்ற இலக்கங்களை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வன்முறைகளைத் தவிர்த்து அமைதியான முறையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழலொன்றை உருவாக்குமாறும் அனைத்து தரப்பினரிடமும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடு என்ற வகையில், ஜனநாயக கடமையினால் மாத்திரமே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

பெறுமதியான வாக்குகளைச் செல்லுபடியற்ற வாக்குகளாக மாற்றாமல் உரிய முறையில் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles