(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
விளையாட்டுத்துறைக்கான புதிய பணிப்பாளர் நாயகமாக மருத்துவ கலாநிதி ஷமல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
கலாநிதி பெர்னாண்டோ இலங்கை பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் ஆவார்.
கலாநிதி பெர்னாண்டோ, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கல்விப் பட்டம், விளையாட்டு நிர்வாகம் குறித்த நிர்வாக ஆளுஉ, தகுதிகளைப் பெற்றுள்ளார்.
தவிர, புகழ்பெற்ற அமெரிக்காவின் கடற்படைப் போர்க் கல்லூரியில் சர்வதேசப் பணியாளர் படிப்பு மற்றும் பிற முதுகலை தகுதிகள் போன்ற சிறப்புத் தகுதிகளையும் கொண்டுள்ளார்.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மிகச்சிறந்த விளையாட்டு அறிவியல் கல்வியாளருக்கான மதிப்புமிக்க ஜனாதிபதி விளையாட்டு விருதையும், 2018ஆம் ஆண்டின் சிறந்த கல்வி சாதனையாளருக்கான விளையாட்டு விருதையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.