NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விவாகரத்தில் முடிந்த ஷிகர் தவானின் திருமணம் !

தன்னைவிட 10 வயது மூத்த , ஏற்கனவே விவாகரத்து ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணுடன் இருந்த திருமண பந்தத்தில் இருந்த ஷகர் தவானுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானுக்கு 2012 ஆம் ஆண்டு ஆயிஷாவுடன் திருமணமானது.

இந்நிலையில் மனரீதியாக ஆயிஷா பல துன்புறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளார். அத்தோடு , ஷிகரின் பணத்தில் அவுஸ்திரேலியாவில் 3 வீடுகளை வாங்கி , அதனை தனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு கோரி வற்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து , நடத்தப்பட்ட விவாகரத்து வழக்கில் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர் நீதிமன்றில் விவாகரத்து வழங்கியுள்ளது.

Share:

Related Articles