NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 34வது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்குவார் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு சிறப்பு நிபந்தனைகளின் கீழ், கைதிகளுக்கு அரசு பொது மன்னிப்பு வழங்கப்படும். அதன்படி,  இன்று (23) தீவு முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் உள்ள 278 கைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகளும், மஹர சிறைச்சாலையில் இருந்து 37 கைதிகளும் விடுவிக்கப்படவுள்ள கைதிகளில் அடங்குகின்றனர்.

விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் 10 பெண் கைதிகள் இருப்பதாக சிறைத்துறை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles