NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள இலங்கையர்.

இத்தாலியில் ரோம் நகரில் பணிபுரியும் இலங்கைப் பெண்ணை கடந்த 26 ஆம் திகதி கத்தியால் குத்தி பலத்த காயப்படுத்திய கணவனின் சடலம் மீடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியை பலமுறை கத்தியால் குத்திய கணவர், பின்னர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles