NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாட்டு பயணங்களுக்காக 70 கோடியை செலவழித்துள்ள அநுரகுமார!

ஜே.வி.பி இன் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கடந்த 20 மாத காலத்தினுள் 14 நாடுகளுக்கு பயணித்துள்ளதாகவும் அதற்காக அவர் சுமார் 70 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சீ.தொலவத்த வெளிப்படுத்தியுள்ளதாக வார இறுதி சிங்கள பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க இந்த அனைத்து பயணங்களின் போதும் அதிக விலையில் காணப்படும் வணிக வகுப்பில் பயணித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுரகுமார இவ்வாறு பயணித்துள்ள நாடுகள் மாலைதீவு, குவைட், இத்தாலி, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, கனடா, சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவையாகும்.

இந்த பயணங்களுக்கு இடையில் இவ்வருடத்தில் கடந்த 6 மாதங்களுக்குள் மாத்திரம் 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை (19) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles