NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளம் பார்க்க படகில் சென்றவர்களை மின்சாரம் தாக்கியது – ஒருவர் பலி

புலத்சிங்கள திவலகட பிரதேசத்தைச் சேர்ந்த லொகு சின்ஹாரச்சிகே தமித் குமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அந்த இளைஞன் சுமார் இருபது பேர் கொண்ட குழுவுடன் நேற்று (03) மாலை வெள்ளத்தைப் பார்ப்பதற்காக படகில் சென்று கொண்டிருந்தார்.

குறித்த குழுவினர் பயணித்த படகை உயிரிழந்த இளைஞன் ஓட்டிச் சென்றதுடன், துடுப்பை ஏந்திய போது, உயர்நிலை மின்கம்பியில் மோதி வெள்ளத்தில் விழுந்துள்ளார்.

படகில் இருந்தவர்களும் மின்சாரம் தாக்கி படகிற்குள் விழுந்ததாகவும், ஆனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

Share:

Related Articles