NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளவத்தையில் ரூ.3 இலட்சத்துக்கும் அதிகமான பழைய பத்திரிகைகள் திருட்டு!

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 1486 கிலோ பழைய பத்திரிகைகள் திருடப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட பழைய பத்திரிகைகளின் மதிப்பு ரூபா 3 இலட்சத்துக்கும் அதிகம் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை மெனிங் பொதுச் சந்தையின் நான்காவது மாடியில் இந்தக் கடை அமைந்துள்ளதுடன், கடந்த செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (23) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு நேற்று (24) முறைப்பாடு கிடைத்துள்ளது.

Share:

Related Articles