NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைத்தியசாலை பாதுகாப்பாளர் மருத்துவ சோதனைகளில் ஈடுபட்ட சம்பவம் – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் முறைக்கேடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நோயாளர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்காக வைத்தியசாலையின் பாதுகாப்பு சேவையில் காவலாளியாக பணிபுரியும் பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 25ஆம் திகதி மருத்துவ பரிசோதனைக்காக வந்த பெண்ணொருவரின் இரத்த அழுத்த பரிசோதனையை வைத்தியசாலையின் பாதுகாப்பு சேவையில் பணிபுரியும் குறித்த பெண் ஒருவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயாளியின் இரத்த அழுத்தத்தின் அடிப்படையில், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர் நோயைக் கண்டறிந்து நோயாளிக்கு மருந்துகளை வழங்க வேண்டும் என்ற நிலையில், அந்த வைத்தியசாலையில் காவலாளியாக பணிபுரியும் பெண் ஒருவரே அந்த கடமையை செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles