(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் தணிக்கை விதிக்கவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஒலிபரப்பாளர்கள் மன்றத்தின் தலைவர் அசங்க ஜயசூரியவுக்கு அதன் செயலாளர் மொஹான் டி சில்வா கையொப்பமிட்ட கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
சில ஊடக நிறுவனங்கள் அல்லது ஊடகவியலாளர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தடை விதித்ததாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.