NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ தளபதி பலி.

கோலான்குன்று பகுதியில் நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ தளபதி கொல்லப்பட்டார்.

இந்தாக்குதல் செவ்வாய்க்கிழமை மாலை நடத்தப்பட்டுள்ளது.

பெய்ரூட்டின் தெற்கே புறநகர்ப் பகுதியும் ஹிஸ்புல்லாவின் கோட்டையுமான தாஹியில் செவ்வாய்க்கிழமை இரவு 7:40 மணியளவில் தாக்குதல் நடந்தது.பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து புகை மூட்டம் அக்கம் பக்கத்தில் எழுந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Share:

Related Articles