NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹோட்டல் அறைகளுக்கு வெளியே பல மணிநேரம் காத்திருந்த இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

உலகக் கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டிகளுக்காக சிம்பாப்வே சென்ற இலங்கை அணியினர் அந்த நாட்டில் ஹோட்டல் அறைகளுக்கு வெளியே பல மணிநேரம் காத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகியிருந்தன.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்து விளக்கமளித்துள்ளது.

இலங்கை அணியினர் ஹோட்டலிற்கு மதியம் வந்தவேளை மற்றுமொரு அணியும் வந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு உரிய அறைகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இந்த விடயத்தை ஹோட்டல் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Share:

Related Articles