பிரதமர் மோடி இந்த ஆண்டிற்குள் இலங்கைக்கு வருகை தருவார் என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த திகதிகள் இன்னும் இருதரப்பில் இருந்தும் முடிவாகவில்லை என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக, இந்திய பிரதமர் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 2 இருமுறை இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.