NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 19ம் திருவிழா இன்று!

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 19ம் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று காலை நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.

சூரிய திருவிழாவான இன்று நூறுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூரிய பகவானின் அருள் காட்சியினை கண்டு களித்தனர்.

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளது. 

Share:

Related Articles