NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

11 கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது!

2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்று (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கஜ முத்துக்களை வியாபாரம் செய்வதற்காக எடுத்து வந்து காத்துக் கொண்டிருந்த பொது அங்கு மாறுவேடத்தில் இருந்த விசேட அதிரடிப்படையினர் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்ததுடன் வியாபாரத்துக்காக எடுத்து வந்த சட்ட விரோதமான 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜமுத்துக்களை மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக பொலிசார் தெரிவித்தனர்.

Share:

Related Articles