நாடு பூராகவும் நிர்ணயிக்கப்பட்ட பாண் நிறை மற்றும் பாண் விலை என்பவற்றை காட்சிப்படுத்தாத 200 இற்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள், விற்பனை நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் அவற்றுக்கு எதிராக எதிர்வரும் சில தினங்களில் வழக்கு தொடரப்படும் என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்புகளின்போது அநேகமான வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக உரிய நிறைக்கு பாண் விற்பனை செய்யாமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.